search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்"

    சிரியா நாட்டின் ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் விமானப்படைகள் இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. #Israeliairstrike #Syrianmilitary
    டமாஸ்கஸ்:

    சிரியா-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா போராளிகள் பலர் பதுங்கியுள்ளனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போராளிகளை வேட்டையாட இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு.

    அவ்வகையில், இன்று அதிகாலை லெபனானில் இருந்து புறப்பட்டு சென்ற இஸ்ரேல் நாட்டின் போர் விமானங்கள் சிரியாவின் மத்திய பகுதியில் மாஸ்யாப் நகரில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின.



    இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகளில் சிலவற்றை தடுத்து அழித்து விட்டதாகவும் இந்த தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த 3 வீரர்கள் காயமடைந்ததாகவும், ராணுவ முகாமின் சில பகுதி சேதமடைந்ததாகவும் சிரியா அரசு தெரிவித்துள்ளது. #Israeliairstrike #Syrianmilitary
    சிரியா நாட்டின் தலைநகரமான டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தங்களை தாக்கவந்த ஏவுகணையை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. #Israelimissileattack #missileattack #Damascusmissileattack
    டமாஸ்கஸ்:

    சிரியா நாட்டின் தலைநகரமான டமாஸ்கஸ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக சிரியா அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் அந்த ராணுவ தளம் சேதமானதாகவும் மூன்று வீரர்கள் காயமடைந்ததாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    ஆனால், இதற்கு இஸ்ரேல் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் இருந்து தங்கள் நாட்டை தாக்கவந்த ஏவுகணைகளை டமாஸ்கஸ் அருகே நாங்கள் வழிமறித்து சுட்டு வீழ்த்தினோம் என இஸ்ரேல் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. #Israelimissileattack #missileattack #Damascusmissileattack
    சிரியா தலைநகர் டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே இன்று அதிகாலை இரு ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்தின. #Israelimissiles #DamascusAirport
    கெய்ரோ:

    இஸ்ரேல் நாட்டின் கோலன் ஹெயிட்ஸ் பகுதியில் இருந்து டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று அதிகாலை இஸ்ரேல் நாட்டின் விமானப்படைகள் இரு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக சிரியாவில் போர் நிலவரங்களை கண்காணித்துவரும் முகமை தெரிவித்துள்ளது.

    சிரியா அரசுக்கு ஆதரவான படைகளின் ஆயுத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிர்பலி ஏதுமில்லை என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Israelimissiles #DamascusAirport 
    ×